தமிழகம் முழுவதும் பெண்கள் அரசு நகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கும் திட்டம் இன்று முதல் அமல்

0 4050
தமிழகம் முழுவதும் பெண்கள் அரசு நகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கும் திட்டம் இன்று முதல் அமல்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவை தொடர்ந்து தமிழகம் முழுவதும் சாதாரண கட்டண அரசு நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது.

இலவசமாக பயணிக்க அடையாள அட்டையோ, பயண அட்டையோ எதுவும் தேவையில்லை. இதனால், அன்றாட வேலைக்குச் செல்லும் பெண்கள் மகிழ்ச்சியுடன் பயணித்து வருகின்றனர்.

தினசரி பேருந்துக்காக செலவிடும் தொகை மிச்சமாகும் எனக் கூறும் பெண்கள், கூடுதலாக நகர பேருந்துகளை இயக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இன்றைய நிலவரப்படி, சென்னையில் சுமார் ஆயிரம் ஒயிட் போர்டு எனப்படும் சாதாரண கட்டண பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மகளிருக்கு இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.

கோவையில் ஏற்கனவே, 369 சாதாரண கட்டண பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், பெண்களின் வசதி கருதி கூடுதலாக 78 பேருந்துகள் சாதாரண கட்டண பேருந்துகளாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த திட்டம் மூலம் ஆண்டொன்றுக்கு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் சுமார் 1200 கோடி ரூபாய் இழப்பினை ஈடு செய்யும் பொருட்டு, இழப்பு தொகையினை அரசு போக்குவரத்து கழகங்களுக்கு மானியமாக வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

சென்னையில் சாதாரண பேருந்து, டீலக்ஸ் பேருந்து என வெவ்வேறு விதமான பேருந்துகள் ஓடுகின்றன. இவற்றில் ஒயிட் போர்டு கொண்ட சாதாரண கட்டண பேருந்தில் மட்டுமே பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்.

மற்ற பகுதிகளில், நகர பேருந்துகளில் மட்டுமே இலவசமாக பயணம் செய்யலாம்.தொலைதூர பேருந்துகளுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments