பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை 4 ரூபாயும் குறைக்கப்படும் என திமுக வாக்குறுதி...

0 1938

அரிசி குடும்ப அட்டை வைத்துள்ளோருக்கு கொரோனா நிவாரணமாக நாலாயிரம் ரூபாய் வழங்கப்படும், பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாயும், டீசல் விலை 4 ரூபாயும் குறைக்கப்படும் என்பன உட்பட ஏராளமான அறிவிப்புகள் திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. 

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டித் திமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார். அதில் ஐந்நூற்றுக்கு மேற்பட்ட உறுதிமொழிகள் இடம்பெற்றுள்ளன. திமுக ஆட்சிக்கு வந்தால் திருக்குறளைத் தேசிய நூலாக்க வலியுறுத்தப்படும், அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கத் தனி நீதிமன்றம் அமைக்கப்படும் எனத் தெரிவித்தார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments