தமிழ்நாடு
குறிப்பிட்ட சமூகத்தவர்கள் தான் விழாக்களை நடத்த வேண்டுமா? - நீதிபதிகள்
May 14, 2025 10:51 AM
375
குறிப்பிட்ட சமூகத்தவர்கள் தான் விழாக்களை நடத்த வேண்டுமா? - நீதிபதிகள்
கரூர் மாவட்டம் நெரூர் ஆரவாயி அம்மன் கோவில் திருவிழாவின்போது தேரை பட்டியல் சமூகத்தினர் வசிக்கும் பகுதிக்கும் கொண்டு செல்லக் கோரிய வழக்கில் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
வழக்கு விசாரணையின்போது, ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் விழாக்களை நடத்த வேண்டுமா? மற்றவர்கள் வேடிக்கை மட்டும் தான் பார்க்க வேண்டுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், வழக்கு தொடர்பாக காவல் கண்காணிப்பாளர், விழாக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu