​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டெல்லி சட்டசபைத் தேர்தலில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை

Published : Feb 11, 2020 6:32 AM

டெல்லி சட்டசபைத் தேர்தலில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை

Feb 11, 2020 6:32 AM

டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 8ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் 62 புள்ளி 59 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 70 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. டெல்லியில் எந்த கட்சி ஆட்சியமைக்கும் என்பது பிற்பகலுக்குள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தேர்தலில் பாஜக, காங்கிஸ் கட்சிகள் குறைந்த அளவிலான இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும், ஆளும் ஆம் ஆத்மி கட்சி அதிக அளவில் இடங்களை பிடித்து மீண்டும் ஆட்சி அமைக்கும் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. 2015ம் ஆண்டு தேர்தலின் போது, மொத்தம் உள்ள 70 இடங்களில் ஆம்ஆத்மி கட்சி 67 இடங்களை பிடித்து ஆட்சிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.