​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..!

Published : Feb 10, 2020 7:13 PM

கடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..!

Feb 10, 2020 7:13 PM

தமிழகத்தில் கடந்த ஆண்டில் இயல்பை விட 2 சதவீதம் கூடுதலாக 45 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளதாக தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் வானிலை ஆய்வு மையம் சார்பில் பருவக்காற்று 2019 என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றப்பின் செய்தியாளர்களை சந்தித்த பாலச்சந்திரன், தமிழகத்தின் நீர் ஆதாரத்துக்கு வடகிழக்கு பருவமழை முக்கியமானது என்று குறிப்பிட்டார். தற்போது இயல்பை ஓட்டியே வெயில் அடித்து வருவதாகவும், ,இந்த ஆண்டின் கோடை கால வெப்பநிலை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.