​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ

Published : Feb 10, 2020 2:19 PM



காரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ

Feb 10, 2020 2:19 PM

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே காரில் சென்றுக் கொண்டிருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சாலையோரம் நின்றிருந்த சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

நேற்று வாழப்பாடியில் தனியார் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கருவேப்பிலைப்பட்டி அருகே காரில் சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது சாலையோரத்தில் நின்றிருந்த சிறுவர்கள் முதலமைச்சரை கண்டதும் கைகளை அசைத்து உற்சாகத்துடன் வரவேற்றனர்.

இதனை கண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி யாரும் எதிர்பாராத வகையில் ஓட்டுநரிடம் காரை உடனே நிறுத்த சொல்லி, அங்கிருந்த சிறுவர்கள் மற்றும் பெண்களை அழைத்து சாக்லேட்களை வழங்கி மகிழ்வித்தார்.