​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
CAA -க்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களுக்கு ராஜ் தாக்கரே எச்சரிக்கை

Published : Feb 10, 2020 6:41 AM

CAA -க்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களுக்கு ராஜ் தாக்கரே எச்சரிக்கை

Feb 10, 2020 6:41 AM

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக, மகாராஷ்டிரா நவநிர்மான சேனா கட்சியினர், மும்பையில், பிரம்மாண்ட பேரணி நடத்தினர்.

யாரிடம் மோதிப் பார்க்கிறீர்கள் என்று ஆவேச முழக்கமிட்டுள்ள மகாராஷ்ட்ரா நிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வன்முறைப் போராட்டம் நடத்தி வருபவர்களை கடுமையாக எச்சரித்துள்ளார்.

கல்வீச்சுக்கு பதில் கல்வீச்சும் வாள்வீச்சுக்கு பதில் வாள் வீச்சும் தரப்படும் என்று அவர் கர்ஜித்துள்ளார். சிஏஏ இந்தியாவில்பிறந்த முஸ்லீம்களுக்கு எதிரானதல்ல என்பதை மத்திய அரசு தெளிவுற விளக்கியுள்ள பின்னரும் எதற்காக அவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள் என்றும் ராஜ் தாக்கரே கேள்வி எழுப்பினார்.

காஷ்மீர் சட்டப்பிரிவு 370 ரத்து, ராமர் கோவில் கட்டும் நடவடிக்கை, குடியுரிமை திருத்த சட்டம் போன்றவற்றை துணிவுடன் செயல்படுத்தி வரும் மத்திய அரசை பாராட்டுவதாகவும் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.