​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் மழைக்கு வாய்ப்பு..!

Published : Feb 09, 2020 6:20 PM

சென்னையில் மழைக்கு வாய்ப்பு..!

Feb 09, 2020 6:20 PM

நீண்ட காலமாக நீடித்து வந்த வெப்பத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும் விதமாக அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் இருந்து வரக்கூடிய காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சியின் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலையாக 23 டிகிரி செல்சிசும், அதிகபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியசும் பதிவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.