​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முதலமைச்சரின் அறிவிப்புக்கு ராமதாஸ் வரவேற்பு

Published : Feb 09, 2020 5:39 PM

முதலமைச்சரின் அறிவிப்புக்கு ராமதாஸ் வரவேற்பு

Feb 09, 2020 5:39 PM

தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு மூலம் காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாக மாறுவது தடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த பன்னாட்டு நிறுவனங்கள் காத்திருந்த நிலையில், அவற்றை முறியடிக்கும் வகையிலான இந்த அறிவிப்பு முதலமைச்சரின் அரசியல் துணிச்சலை வெளிப்படுத்துவதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதனால் காவிரி பாசன மாவட்ட உழவர்களின் எதிர்காலத்தைச் சூழ்ந்திருந்த கருமேகங்கள் விலகியுள்ளதாகவும் ராமதாஸ் கூறியுள்ளார்.