​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சீனாவுடனான வணிக ஒப்பந்தத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் - மைக் பாம்பியோ

Published : Feb 09, 2020 12:58 PM

சீனாவுடனான வணிக ஒப்பந்தத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் - மைக் பாம்பியோ

Feb 09, 2020 12:58 PM

அமெரிக்கா ஓய்வூதிய நிதிகள் சீனா தொடர்புடைய நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுவதால் அது சீனாவில் உள்ள முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராகவும், அமெரிக்க ராணுவத்தை ஆபத்தில் ஆழ்த்தவும் பயன்படுத்தப்படுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ குற்றம்சாட்டியுள்ளார்.

மாநில ஆளுநர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அவர், சீனாவுடன் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்வதில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வலியுறுத்தினார். குறிப்பிட்ட மாநிலங்களின் ஓய்வூதிய நிதிகள், நிறுவன செயல்பாடுகளின் தீவிரத் தன்மை புரியாமல் அவற்றில் முதலீடு செய்யப்படுவதாக மைக் பாம்பியோ கூறினார்.

சீனாவில் உள்ல 10 லட்சம் முஸ்லீம் சிறுபான்மையினரை கண்காணிப்பதற்காக சீன கம்யூனிஸ்ட் கட்சி பயன்படுத்தி வரும் நிறுவனத்தில் ஃபுளோரிடா மாநில ஓய்வூதிய நிதி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கலிஃபோர்னியா ஓய்வூதிய நிதி சீனாவின் ராணுவத்துக்கு பொருட்களை வினியோகிக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், இது அமெரிக்க முப்படைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டார்