​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சுற்றுலா வேன் மீது தனியார் ஆம்னி பேருந்து மோதியதில் 3 பேர் உயிரிழப்பு

Published : Feb 08, 2020 12:36 PM

சுற்றுலா வேன் மீது தனியார் ஆம்னி பேருந்து மோதியதில் 3 பேர் உயிரிழப்பு

Feb 08, 2020 12:36 PM

மதுரை திருமங்கலம் அருகே சுற்றுலா வேன் மீது தனியார் ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் 3 வடமாநிலப் பெண்கள் உயிரிழந்தனர்.

ஹரியானாவிலிருந்து தமிழகத்துக்கு சுற்றுலா வந்த 41 பேர் மதுரை ரயில்நிலையத்திலிருந்து 2 வேன்களில், கன்னியாகுமரி புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

நேசநேரி அருகே வந்தபோது, அந்த வேன்களில் ஒன்றை ஓட்டி வந்த நவநீதகிருஷ்ணன், இயற்கை உபாதை கழிப்பதற்காக சாலையோரமாக வேனை நிறுத்த முயன்றுள்ளார். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த தனியார் ஆம்னி பேருந்து வேனின் மீது மோதியதில் வேன் பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் 3 பெண்கள் உயிரிழந்த நிலையில் மற்றவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.