​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மீண்டும் வந்தது சீரக சம்பா... கிச்சலி சம்பா, மாப்பிள்ளை சம்பா...

Published : Feb 08, 2020 10:30 AM

மீண்டும் வந்தது சீரக சம்பா... கிச்சலி சம்பா, மாப்பிள்ளை சம்பா...

Feb 08, 2020 10:30 AM

நாகை மாவட்ட விவசாயி ஒருவர், மறைந்து போன சீரக சம்பா, கிச்சலி சம்பா, மாப்பிள்ளை சம்பா போன்ற நெல் ரகங்களை, மீண்டும் இயற்கை முறை விவசாயத்தில் பயிரிட்டு, சாகுபடி செய்து மீட்டெடுத்து அசத்தியுள்ளார்.

சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா, கிச்சலி சம்பா, பூங்காறு, இவையெல்லாம் தமிழகத்தில் மறைந்து போன நெல் ரகங்கள். 6 அடி உயரத்தில் வளர்ந்து, சாகுபடி செய்த பின்பு அதன் வைக்கோல் சிறந்த கால்நடை தீவனமாக பயன்படுத்தப்பட்டு வந்தது.

ஆனால் நவீன கண்டுபிடிப்புகளான 3 மாத நெல் பயிர்களால், சம்பா பயிரிடுவதில் விவசாயிகளிடம் ஆர்வம் குறைந்தது. இந்நிலையில், சீர்காழி அருகே உள்ள திருவெண்காடு கிராமத்தைச்சேர்ந்த விவசாயி ஸ்ரீதரன், தனது 5 ஏக்கர் நிலத்தில் மறைந்துபோன ஜீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா, கிச்சலி சம்பா நெல் ரகங்களை தேடிப்பிடித்து வாங்கி வந்து பயிரிட்டுள்ளார். அவை 6 அடி உயரத்தில் ஓங்கி செழித்து வளர்ந்து கதிர்கள் கொத்துக் கொத்தாக நல்ல விளச்சலை தந்துள்ளது.

இதற்கு காரணம் இயற்கை முறை விவசாயம் தான் என்பதை விவரிக்கும் ஸ்ரீதரன், சாண எரு, புண்ணாக்கு, பஞ்ச கவியம் போன்றவற்றை உரமாக இடுவதால் பூச்சி தாக்குதல் இல்லாமல் மகசூல் அதிகரித்து, குறைந்த செலவில் நிறைந்த லாபம் கிடைப்பதாக கூறுகிறார்.

மற்ற விவசாயிகளுக்கும் விதைகள் கொடுத்து அவர்களையும் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்தியுள்ள ஸ்ரீதரன், முன்னோர்கள் சம்பா ரக நெல் சாப்பிட்டு நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ்ந்ததாகவும், வருங்கால சந்ததியையும் அதுபோல் உருவாக்கவேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.