​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கேரளாவில் கொரனோ பாதிப்பு பீதி குறைகிறது..!

Published : Feb 08, 2020 8:56 AM



கேரளாவில் கொரனோ பாதிப்பு பீதி குறைகிறது..!

Feb 08, 2020 8:56 AM

கேரளாவில் கொரனோ வைரஸ் பாதிப்புள்ளதாக சந்தேகத்துக்கு ஆளான 67 பேருக்கும் நோய் பரவல் இல்லை என்று பரிசோதனைக்குப் பின் தெரிய வந்தது.

இதனால் கேரள அரசு அறிவித்திருந்த பேரிடர் கால நிலையை திரும்பப் பெற்றுக் கொண்டது .கொரனோ நோயால் பாதிக்கப்பட்ட ஓரிரு நோயாளிகளும் விரைவாக குணமடைந்து வருகின்றனர்.

கடந்த திங்கட்கிழமை காசர்கோடு பகுதியை சேர்ந்த மூன்றாவது நபருக்கு கொரனோ வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து மாநிலத்தில் பேரிடர் அவசர நிலையை கேரள அரசு அறிவித்தது.

பாதிக்கப்பட்டவர்கள் 28 நாட்கள் தனிமையில் வைக்கப்பட்டு தீவிர மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.