​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அலைச்சறுக்கு வீரருடன் பாதுகாப்பாக துள்ளி வந்த டால்பின்கள்

Published : Feb 08, 2020 8:48 AM

அலைச்சறுக்கு வீரருடன் பாதுகாப்பாக துள்ளி வந்த டால்பின்கள்

Feb 08, 2020 8:48 AM

அமெரிக்காவில் சுறாக்கள் நிறைந்த கடல் பகுதியில் அலைச்சறுக்கு விளையாடிய வீரருக்கு துணையாகவும், பாதுகாப்பாகவும் டால்பின் வந்த வீடியோ வெளியாகி உள்ளது.

கலிபோர்னியாவில் உள்ள வெஞ்சூரா கடல் பகுதி சுறாக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படுவது வழக்கம். அவ்வப்போது சுறாக்களால் தாக்கப்பட்டாலும் ஆபத்தை எதிர்கொண்டு அலைச்சறுக்கு விளையாடுபவர்கள் இங்கு அதிகம். இந்த நிலையில் கிரெய்க் பேட்ஜர் என்பவர் அலைச்சறுக்கு விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது அலையினூடாக சில டால்பின்களும் அவருக்கு துணையாகவும், சுறாக்களிடம் இருந்து கிரெய்க்கை பாதுகாக்கும் வகையிலும் அவருடன் துள்ளிக் குதித்தவாறே கரை வரை பயணித்தன. இந்த சம்பவத்தை அவரது நண்பர் ட்ரோன் கேமரா மூலம் பதிவிட்டுள்ளார்.