​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு

Published : Feb 08, 2020 6:50 AM

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு

Feb 08, 2020 6:50 AM

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 20 ஓவர் தொடரை வென்ற நிலையில், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. ஹாமில்டனில் நடந்த முதல் போட்டியில்  நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், ஆக்லாந்தில் நடைபெறும் இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் இரண்டு மாற்றங்களாக பந்துவீச்சாளர்கள் ஷமி மற்றும் குல்தீப் யாதவிற்கு ஓய்வளிக்கப்பட்டு, சைனி மற்றும் சஹல் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் வென்றால்தான் தொடரை கைப்பற்ற முடியும் என்ற நிலையில் இந்திய அணி விளையாடி வருகிறது.