​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிரியா ஏவுகணை தாக்குதலில் தப்பியது 172 பயணிகளுடன் பறந்த விமானம்

Published : Feb 07, 2020 5:35 PM

சிரியா ஏவுகணை தாக்குதலில் தப்பியது 172 பயணிகளுடன் பறந்த விமானம்

Feb 07, 2020 5:35 PM

172 பயணிகளுடன் பறந்த விமானம் ஒன்று சிரியா ஏவுகணை தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பியதாக  ரஷ்யா தெரிவித்துள்ளது.

சிரிய தலைநகர் டமாஸ்கசுக்கு அருகே வட்டமிட்ட இஸ்ரேலிய போர்விமானங்களை நோக்கி சிரியா ராணுவம் வைத்த குறியால்  ரஷ்யாவின் இந்த பயணியர் விமானம் ஏறத்தாழ வீழ்த்தும் நிலைமைக்கு வந்துவிட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள் காட்டி ரஷ்ய செய்தி நிறுவனமான RIA கூறியுள்ளது.

சிரியாவின் ஏவுகணைகளிடம் இருந்து தப்பித்த இந்த விமானம் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கெமிமிம் (Khmeimim) விமானப்படை தளத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாகவும் அது தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை இஸ்ரேலின் F- 16  போர் விமானங்கள், சிரியாவின் வான் எல்லைக்குள் ஊடுருவாமல், சிரியாவின் புறநகர் பிரதேசங்களின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.