​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சட்டவிரோதமாக பைக் ரேசில் ஈடுபட்ட இளைஞர்களை பிடித்து விசாரித்த போலீசார் பெற்றோருக்கு அறிவுரை

Published : Feb 07, 2020 5:16 PM

சட்டவிரோதமாக பைக் ரேசில் ஈடுபட்ட இளைஞர்களை பிடித்து விசாரித்த போலீசார் பெற்றோருக்கு அறிவுரை

Feb 07, 2020 5:16 PM

சென்னை எலியட்ஸ் கடற்கரை சாலையில் கடந்த வாரம் பைக் ரேசில் ஈடுபட்ட 16 பேரை பிடித்து விசாரித்த போலீசார், அவர்களது பெற்றோரை வரவழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

கடந்த பிப்ரவரி 1ம் தேதி பெசண்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில், அயனாவரம், வியாசர்பாடி பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் சிலர் அதிவேகமாக ஒலி எழுப்பியபடி, சட்டவிரோதமாக பைக் ரேசில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அவர்களில் இருவர் கீழே விழுந்து காயமடைந்த நிலையில், அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்நிலையில் பைக் ரேசில் ஈடுபட்ட 16 பேரை வியாழக்கிழமை பிடித்து விசாரித்த சாஸ்திரி நகர் போலீசார், 7 விலையுயர்ந்த இருசக்கரவாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் வெள்ளிக்கிழமை காலையில் அவர்களது பெற்றோரை வரவழைத்து அறிவுரை கூறி இளைஞர்களை அனுப்பி வைத்தனர்.