​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
scrappage policy -க்கு இன்னும் ஒரு மாதத்தில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் - நிதின் கட்கரி

Published : Feb 07, 2020 3:39 PM

scrappage policy -க்கு இன்னும் ஒரு மாதத்தில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் - நிதின் கட்கரி

Feb 07, 2020 3:39 PM

நாள்பட்ட பழைய வாகனங்களை கழிவு இரும்பாக மாற்றும் scrappage policy -க்கு   இன்னும் ஒரு மாதத்தில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கிடைக்கும் என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருக்கிறார்.

scrappage policy அமலுக்கு வந்தால், நாட்டின் எஃகு இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவிற்கு குறையும் என்று டெல்லியில் நடந்த ஆட்டோமொபைல் விற்பனையாளர் சங்க கூட்டமைப்பின் மாநாட்டில் அவர் தெரிவித்தார்.

இதனால்  நேரடிப் பயனுள்ள எஃகின் விலை பாதிக்கப்படும் என்று அந்த துறை சார்ந்தவர்கள் அச்சம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட தரப்புகளின் சந்தேகம் தீர்க்கப்பட்டுள்ளதாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

scrappage policy என்பது ஒரு வாகனம் எத்தனை ஆண்டுகளில் எவ்வளவு தூரம் ஓடியுள்ளது என்பதன் அடிப்படையில் அதை கழிவு இரும்பாக மாற்றுவதாகும்.

இதனால் பழைய வாகனங்கள் அகற்றப்பட்டு, மாசு கட்டுப்படுத்தப்படுவதுடன், புதிய வாகனங்களுக்கான தேவையும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.