​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திரைப்படங்களில் பஞ்ச் டயலாக்... உண்மையில் வரி ஏய்ப்பு... விஜய் குறித்து அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

Published : Feb 07, 2020 11:08 AM



திரைப்படங்களில் பஞ்ச் டயலாக்... உண்மையில் வரி ஏய்ப்பு... விஜய் குறித்து அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

Feb 07, 2020 11:08 AM

நடிகர் விஜய் உள்ளிட்ட சினிமாதுறையினர் திரைப்படங்களில் மட்டும் தங்களை நல்லவர்களாகக் காட்டிக்கொண்டு பஞ்ச் டயலாக் பேசுவதாகவும் உண்மையில் விஜய் வருமான வரி ஏய்ப்பு செய்வதாகவும் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை அடுத்த உடன்குடியில் குடியுரிமைச் சட்ட ஆதரவுக் கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனைத் தெரிவித்தார்.

சி.ஏ.ஏ. விவகாரத்தில் ரஜினி உண்மையை பேசியிருப்பதாகத் தெரிவித்த அவர், ரஜினி வருமான வரி ஏய்ப்பு செய்பவரல்ல என்றும், ரஜினி நேர்மையாக வருமான வரி செலுத்துபவர் என வருமான வரித்துறை சான்று வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.