​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஷீனா போரா படுகொலை வழக்கு - பீட்டர் முகர்ஜிக்கு ஜாமீன்

Published : Feb 07, 2020 6:26 AM

ஷீனா போரா படுகொலை வழக்கு - பீட்டர் முகர்ஜிக்கு ஜாமீன்

Feb 07, 2020 6:26 AM

இளம் பெண் ஷீனா போரோ கொலை வழக்கில் கடந்த 2015ம் ஆண்டு கைது செய்யப்பட்ட பீட்டர் முகர்ஜிக்கு 4 ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

கொலை நடந்த போது பீட்டர் முகர்ஜி இந்தியாவில் இல்லை. அவர் மீது எந்த குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியவில்லை .ஏற்கனவே நான்கு ஆண்டுகள் சிறையில் இருந்து விட்ட அவர் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார் என்பதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

இக்கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக பீட்டரின் மனைவி இந்திராணி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளார். நேற்று மும்பை உயர்நீதிமன்றம் பீட்டர் முகர்ஜியாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதற்கு எதிராக சிபிஐ மேல்முறையீடு செய்வதற்கு ஆறுவார கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.