​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொரோனா தடுப்பில் ஈடுபட்டோருக்கு சேமிப்பு பணத்தை அளித்த சீன துப்புரவு ஊழியர்

Published : Feb 05, 2020 5:31 PM

கொரோனா தடுப்பில் ஈடுபட்டோருக்கு சேமிப்பு பணத்தை அளித்த சீன துப்புரவு ஊழியர்

Feb 05, 2020 5:31 PM

சீனாவில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளோரிடம் வழங்குவதற்கு தமது சேமிப்பு பணத்தை துப்புறவு ஊழியர் ஒருவர் மொத்தமாக வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

image

டோங்காங் பகுதியை சேர்ந்த 68 வயதான துப்புரவு பணியாளர் ஒருவர், அங்குள்ள காவல்நிலையத்துக்கு சென்று தன்னிடம் இருந்த சேமிப்பு பணம் சுமார் 1.20 லட்சம் ரூபாயை வைத்துவிட்டு வேகமாக வெளியேறினார்.

image

தன்னை அடையாளப்படுத்தவோ, யார் என்று தெரிவிக்கவோ இல்லை. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளோரை ஊக்கப்படுத்த அத்தொகையை அளிக்கும்படி கடிதத்தை மட்டும் எழுதி வைத்துள்ளார். இந்த சம்பவம் சீன மக்களிடையே மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.