​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மகன் திருமணத்தில் பங்கேற்க 3 நாட்கள் பரோலில் வருகிறார் லாலுபிரசாத்

Published : May 10, 2018 9:18 PM

மகன் திருமணத்தில் பங்கேற்க 3 நாட்கள் பரோலில் வருகிறார் லாலுபிரசாத்

May 10, 2018 9:18 PM

ராஷ்ட்ரீய ஜனதாதளத் தலைவர் லாலுபிரசாத் யாதவ் தனது மகன் தேஜ்பிரதாப் யாதவ் திருமணத்தில் பங்கேற்க 3 நாட்கள் பரோலில் வருகிறார்.  கால்நடைத் தீவன ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்று லாலு பிரசாத் யாதவ் ராஞ்சியில் உள்ள பிர்சாமுண்டா சிறையில் உள்ளார்.

இந்நிலையில் ராஷ்ட்ரீய ஜனதாதளத் தலைவர்களில் ஒருவரான சந்திரிகா யாதவின் மகளும் பீகார் முன்னாள் முதலமைச்சரான தரோகா பிரசாத் ராயின் பேத்தியுமான ஐஸ்வர்யா ராயுடன் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் யாதவின் திருமணம் வரும் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது.திருமணத்தில் பங்கேற்க லாலு தரப்பில் 5 நாட்கள் பரோல் கோரப்பட்டது. ஆனால் 3 நாட்கள் மட்டும் பரோல் வழங்கப்பட்டுள்ளது.