​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குழந்தைக்கு பாலூட்டிய பெண்ணிடம் 6 சவரன் தாலிசெயினை பறித்தவன் கைது

Published : Feb 05, 2020 11:37 AM



குழந்தைக்கு பாலூட்டிய பெண்ணிடம் 6 சவரன் தாலிசெயினை பறித்தவன் கைது

Feb 05, 2020 11:37 AM

சென்னை அருகே குழந்தைக்கு பாலூட்டிய பெண்ணிடம் தாலிசெயினை பறித்து தப்பிய நபர், மற்றொரு பெண்ணிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டபோது பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

அண்ணனூர், பாலாஜி நகரில் ஆசிரியை மேனகா என்பவர் தனது குழந்தைக்கு பாலூட்டிக்கொண்டிருந்தார். அப்போது, வீடுபுகுந்த மர்மநபர் ஒருவர் அவரது 6 சவரன் தாலிச் செயினை பறித்ததுடன், அருகில் 18 வது தெருவில் சுலோச்சனா என்பவரது வீட்டுக்குள் புகுந்து, அவரது செல்போனை பறித்து தப்பமுயன்றான்.

image

சத்தம்கேட்டு, அக்கம்பக்கத்தினர் திரண்டு அந்நபரை பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். 19 வயதாகும் பாபு என்பவன் கைது செய்யப்பட்டு, கூட்டாளி விக்னேஷ் குமாரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர். இவர்கள் அயப்பாக்கத்தில் ஜெயக்குமார் என்பவரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

 Watch Polimer News Online : https://bit.ly/31rVwr8