​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மகாராஷ்டிராவில் பெண் விரிவுரையாளர் உயிருடன் தீவைத்து எரிப்பு

Published : Feb 04, 2020 7:20 AM



மகாராஷ்டிராவில் பெண் விரிவுரையாளர் உயிருடன் தீவைத்து எரிப்பு

Feb 04, 2020 7:20 AM

மகாராஷ்டிராவில் கல்லூரி விரிவுரையாளர் ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வர்தா மாவட்டம் ஹிங்கன்காட்டில்(Hinganghat) உள்ள தனியார் கல்லூரியில் அந்தப் பெண் பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று காலை கல்லூரிக்கு சென்றபோது, வழிமறித்த இளைஞன் மண்ணெண்ணெயை ஊற்றித் தீவைத்துள்ளான். தீப்பற்றியதால் அலறித் துடித்த அந்தபெண்ணை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக நாக்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அந்த பெண் அனுமதிக்கப்பட்டார்.

40 சதவீத தீக்காயங்கள் இருப்பதாகவும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். ஒருதலைக் காதல் விவகாரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக விக்கி நாக்ரேல் (Vicky Nagrale) என்பவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.