​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை, இரு சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது

Published : Feb 03, 2020 7:54 PM

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை, இரு சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது

Feb 03, 2020 7:54 PM

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்யப்பட்டது தொடர்பாக இரு சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாலையில் விளையாடிக்கொண்டிருந்த அச்சிறுமி, தோட்டத்தில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டாள். இதில் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.imageஇதற்கிடையே உடற்கூராய்வு பரிசோதனையில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை நடந்திருப்பதாக தகவல் வெளியானதையடுத்து போலீசார், போக்சோ சட்டப்பிரிவு மற்றும் பாலியல் வன்கொடுமை, கொலை ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

இது தொடர்பாக 14,16 வயதுடைய இரு சிறுவர்களை பிடித்து விசாரித்து வரும் போலீசார், உமா சேகர் என்பவரை கைது செய்துள்ளனர்.