​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் .. நிலவேம்பு கசாயம் தீர்வாகுமா.?

Published : Feb 03, 2020 5:07 PM

அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் .. நிலவேம்பு கசாயம் தீர்வாகுமா.?

Feb 03, 2020 5:07 PM

லகையே உலுக்கி கொண்டிருக்கும் பெயர் ”கொரோனா வைரஸ்” ..

சீனாவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் இந்தியா உள்ளிட்ட 27 நாடுகளில் பரவி மக்களுக்கிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.

தற்போது தமிழ்நாட்டில் 6 பேர் கொரோனா அறிகுறியுடன் தீவிர கண்காணிப்பில் இருந்து வருந்துகின்றனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் குறித்து பல புரளிகளும், போலி மருந்துகளும், சமூகவலைதளங்களில் உலா வரத்தான் செய்கிறது.

இதற்கிடையே நிலவேம்பு கசாயம் குடித்தால் போதும் கொரோனாவாவது, கிரோனா வாவது.. தமிழ்நாட்டுமக்கள் கொரோனாவுக்கே tough கொடுப்போம் என சில புள்ளிங்கோக்கள் அலப்பறை செய்து வருகின்றனர்.

image

சரி  இவர்கள் சொல்லுவது போல நிலவேம்பு கசாயம் சாப்பிட்டால் கொரோனா வைரஸ் வராதா ? இல்லை கொரோனா வந்தவர்கள் இந்த கசாயம் குடித்தால் குணபடுத்த முடியுமா என பார்ப்போம்

நிலவேம்பு என்பது ஒரு மூலிகை செடியின் பெயர்... நிலவேம்பு கசாயம் என்பது 9 வகையான மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படும் மூலிகை மருந்து…

இதனை கசாயம் செய்து குடிக்கும் பொழுது குளிர்காய்ச்சல், நீர்க்கோவை ,வயிற்று பொருமல் போன்ற நோய்கள் குணமாகும் . சமீபத்தில் பல இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவிய போது நிலவேம்பு கசாயம் அதற்கு தடுப்பு மருந்தாய் தமிழக அரசால் பரிந்துரைக்கப்பட்டது.மேலும் அனைத்து மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதாரநிலையங்களிலும் வழங்கப்பட்டது .

image

நிலவேம்பு கசாயம் ஒரு அரிய மருந்து. அதனை அருந்தும் பொழுது நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். ஆனால் அதற்காக கொரோனா வைரசுக்கு தீர்வு காணும் மருந்து நிலவேம்பு கசாயம் என ஆராய்ச்சிப்பூர்வமாக எந்த நிரூபணமும் இல்லை.  மேலும் உலக சுகாதார அமைப்பின் அறிக்கை படி கொரோனா வைரஸ்க்கு தற்போது வரை மருந்து கண்டுபிடிக்கபடவில்லை என்பதே நிதர்சனம்

image

இந்த வைரஸ் பரவுவதை தவிர்க்க இருமல் மற்றும் காய்ச்சல் உள்ள நபர்களுடன் நேரடி தொடர்பு கொள்ள கூடாது. அதே போல கைகளை நன்கு கழுவுவது, சுகாதாரமாக இருப்பது, நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை வலுப்படுத்தும் உணவுகள் மற்றும் துளசி போன்ற மூலிகைகளை எடுத்து கொள்வது உள்ளிட்டவைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமையும்.