​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆந்திராவில் ONGC Gas கசிவு - கிராம மக்கள் வெளியேற்றம்

Published : Feb 03, 2020 11:43 AM

ஆந்திராவில் ONGC Gas கசிவு - கிராம மக்கள் வெளியேற்றம்

Feb 03, 2020 11:43 AM

ஆந்திராவில் பைப் லைனில் பயங்கர சத்தத்துடன் வெடிப்பு ஏற்பட்டு கேஸ் வெளியேறி வருவதால், கிராம மக்கள் வெளியேற்றப்பட்டு கேஸ் பரவலை கட்டுப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கிழக்கு கோதாவரி மாவட்டம் உப்பிடி கிராமத்தின் அருகே ஓஎன்ஜிசி க்கு சொந்தமான கேஸ் பைப்லைனில் நேற்று மாலை 5 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் வெடிப்பு ஏற்பட்டு தொடர்ந்து கேஸ் வெளியேறி வருகிறது.

உடனே அருகில் தங்கியுள்ள ஊழியர்கள் முன் எச்சரிக்கையாக, மின்சாரம், செல்போன் டவர் இணைப்பை துண்டித்தனர். கிராம மக்களும் வெளியேற்றப்பட்டு, வாகன போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு விரைந்து வந்த நிபுணர்குழுவினர் பைப் லனுக்கு செல்லும் கேசை நிறுத்தி, தீயணைப்பு வீரர்கள் மூலம் நீரைப்பீய்ச்சி அடித்து கேஸ் பரவலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.