​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
5, 8ஆம் வகுப்பு பொது தேர்வை மதிப்பீடாக கருத வேண்டும் - மயில்சாமி அண்ணாதுரை

Published : Feb 02, 2020 9:58 PM



5, 8ஆம் வகுப்பு பொது தேர்வை மதிப்பீடாக கருத வேண்டும் - மயில்சாமி அண்ணாதுரை

Feb 02, 2020 9:58 PM

5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வைக்கப்படும் பொது தேர்வை, பொது தேர்வாக கருதாமல் பொது மதிப்பீடாக கருத வேண்டுமென என முன்னாள் இஸ்ரோ திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். 

சேலத்தில் தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சியில் இஸ்ரோ திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்திராக கலந்து கொண்டு பரிணாம வளர்ச்சி குறித்து உரையாற்றினார்.

முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மயில்சாமி அண்ணாதுரை, இந்தியாவில் தமிழகம் உயர்கல்வியில் முதலிடம் வகிக்கிறது என்றும், தமிழக அரசு கல்வியில் உள்கட்டமைப்பினை சிறப்பாக செய்து வருகிறது எனவும் பாராட்டு தெரிவித்தார்.