​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காளையர்களை கலங்கடித்த அமைச்சர் விஜயபாஸ்கரின் காளைகள்

Published : Feb 02, 2020 1:36 PM



காளையர்களை கலங்கடித்த அமைச்சர் விஜயபாஸ்கரின் காளைகள்

Feb 02, 2020 1:36 PM

புதுக்கோட்டை மாவட்டம் கீழத்தானியத்தில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மாவயல் காட்டு அய்யனார் கோவில் திருவிழாவினை முன்னிட்டு நடைபெற்று வரும் இப்போட்டியில் 650 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

களத்தில் சீறிபாயந்து வரும் காளைகளை மாடுபிடி வீரர்கள் உற்சாகத்துடன் அடக்கி வருகின்றனர். சில காளைகள் வீரர்களிடம் சிக்காமல் களத்தில் நின்று விளையாடியது அங்கு குவிந்திருந்த திரளான பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இப்போட்டியில் அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன் காளை உள்ளிட்ட மூன்று காளைகள் களத்தில் களம் கண்டு, காளையர்களுக்கு கடும் சவால் விடுத்தன.