​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை விமான நிலையத்தில் துப்புரவு பணிப்பெண்ணிடம் 4 கிலோ தங்கம் பறிமுதல்

Published : Feb 02, 2020 7:49 AM



சென்னை விமான நிலையத்தில் துப்புரவு பணிப்பெண்ணிடம் 4 கிலோ தங்கம் பறிமுதல்

Feb 02, 2020 7:49 AM

சென்னை விமான நிலையத்தில் துப்புரவு பணியாளரான விஜயகுமாரி என்ற பெண் ஒருவரிடமிருந்து 2 புள்ளி 4 கிலோ தங்கத்தை மத்திய தொழில்பாதுகாப்பு படை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

சர்வதேச விமான நிலையத்திலிருந்து அவசரமாக அவர் வெளியே செல்ல முயற்சித்தபோது மடக்கிய போலீசார் அவரை சோதனையிட்டபோது ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய தங்கம் சிக்கியது.

100 கிராம் எடை கொண்ட 24 தங்கக்கட்டிகளை தனது இடுப்பில் கருப்பு டேப்புடன் ஒட்டி மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனிடையே சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வந்த நான்கு பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் ஒரு கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்புடைய 4 புள்ளி 46 கிலோ தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன