​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சாம்பியன் பட்டம் வென்றார்.. சோபியா கெனின்..!

Published : Feb 02, 2020 6:34 AM

சாம்பியன் பட்டம் வென்றார்.. சோபியா கெனின்..!

Feb 02, 2020 6:34 AM

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை அமெரிக்காவின் சோபியா கெனின் (Sofia Kenin) வென்றுள்ளார்.

இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கார்பைன் முகுருசாவுடன் (Garbine Muguruza) கெனின் விளையாடினார்.

தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய முகுருசா முதல் செட்டை 6-4 என கைப்பற்றினார். அடுத்த இரண்டு செட்களிலும் அபாரமாக விளையாடிய கெனின் அவரை திணறடித்தார். இறுதியில், 4-6, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் முகுருசாவை வீழ்த்தி கெனின் சாம்பியன் பட்டம் பெற்றார்.

21 வயதான கெனின் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதன்முறையாகும்.