​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் பலனில்லாத பட்ஜெட் - மு.க.ஸ்டாலின்

Published : Feb 01, 2020 7:34 PM

தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் பலனில்லாத பட்ஜெட் - மு.க.ஸ்டாலின்

Feb 01, 2020 7:34 PM

தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் எவ்விதப் பயனும் அளிக்காத, பலனும் இல்லாத நிதி நிலை அறிக்கை என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடுத்தர மக்களை மனதில் கொள்ளாமல் அவர்களை நடுத்தெருவில் நிறுத்தும் பட்ஜெட்டாக உள்ளதாகக் கூறியுள்ளார். பொருளாதார தேக்கநிலை, வேலைவாய்ப்பின்மை, நலிவடையும் கிராமப்புற வளர்ச்சி உள்ளிட்ட நாட்டின் முக்கியப் பிரச்சனைகள் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல், பா.ஜ.க விரும்பும் கலாச்சாரத் திணிப்பைச் செய்யும் நிதிநிலை அறிக்கையாகவே இந்த பட்ஜெட் அமைந்துள்ளதாகவும் ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.