​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பரனூர் சுங்கச்சாவடி கொள்ளை : ஊழியர்களே பணத்தை திருடியது விசாரணையில் அம்பலம்

Published : Feb 01, 2020 5:59 PM

பரனூர் சுங்கச்சாவடி கொள்ளை : ஊழியர்களே பணத்தை திருடியது விசாரணையில் அம்பலம்

Feb 01, 2020 5:59 PM

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாடியில் பணம் கொள்ளைபோன வழக்கில் திடீர் திருப்பமாக, சுங்கச்சாவடி ஊழியர்கள் இருவரே பணத்தை பதுக்கி வைத்திருந்தது அம்பலமாகியுள்ளது.

image

கடந்த 26-ம் தேதி சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்துவது தொடர்பாக நடந்த தகராறின்போது சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டது. இந்த சம்பவத்தின் போது ரூபாய் 18 லட்சம் கொள்ளைபோனதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போலீசார் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

image

விசாரணையில் சிக்கி கொள்வோம் என பயந்த பரமசிவம், செந்தில் ஆகிய இருவர், தாமாகவே முன்வந்து பணத்தை கொள்ளையடித்ததாக உண்மையை ஒப்புக்கொண்டுள்ளனர். இதுதொடர்பாக மேலும் 10 ஊழியர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.