​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குரூப் 4 முறைகேட்டைத் தொடர்ந்து குரூப் 2 ஏ முறைகேடில் இருவர் கைது..!

Published : Feb 01, 2020 2:00 PM

குரூப் 4 முறைகேட்டைத் தொடர்ந்து குரூப் 2 ஏ முறைகேடில் இருவர் கைது..!

Feb 01, 2020 2:00 PM

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 விவகாரத்தைத் தொடர்ந்து குரூப் 2A தேர்விலும் முறைகேடு செய்ததாக இருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

2017 ம் ஆண்டு நடத்தப்பட்ட இந்தத் தேர்வில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் சித்தாண்டி மூலம் முறைகேடு செய்து இருவர் பணியில் சேர்ந்திருப்பதாக தகவல் வெளியானது.

அதனடிப்படையில் காரைக்குடி மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரியும் கா. வேல்முருகன் என்பவரையும் திருநெல்வேலி மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரியும் கே. ஜெயராணி என்பவரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுவரை குரூப் 4 தேர்வில் 16 பேரும் குரூப் 2 ஏ தேர்வில் 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளிகளான ஜெயக்குமாரையும் காவலர் சித்தாண்டியையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.