​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் வரும் 3ம் தேதி முதல் விசாரணையை மேற்கொள்கிறது உச்சநீதிமன்ற அமர்வு

Published : Feb 01, 2020 9:09 AM

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் வரும் 3ம் தேதி முதல் விசாரணையை மேற்கொள்கிறது உச்சநீதிமன்ற அமர்வு

Feb 01, 2020 9:09 AM

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கில் 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன முழு அமர்வு வரும் 3ம் தேதி முதல் விசாரணையை மேற்கொள்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14ம் தேதி 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு இந்த வழக்கை 9 நீதிபதிகள் முழு அமர்வுக்கு மாற்ற உத்தரவிட்டது.

இதில் விவாதிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து மூத்த வழக்கறிஞர்கள் ஆலோசனை நடத்தியும் ஒரு முடிவை எட்ட முடியவில்லை. ஏற்கனவே 5 நீதிபதிகள் அமர்வு அடிப்படை உரிமைகள், மதரீதியான நம்பிக்கைகளால் உருவான நடைமுறைகள் உள்ளிட்ட ஏழு முக்கிய கேள்விகளுக்கு சட்டரீதியான விடை காணுமாறு 9 நீதிபதிகள் அமர்வுக்குப் பரிந்துரை செய்துள்ளது .

கடந்த 13ம் தேதி இந்த விசாரணை தொடங்கப்பட இருந்த நிலையில் விவாதத்திற்கான கேள்விகள் இறுதி செய்யப்படாததால் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
வழக்கறிஞர் வாதத்தின் அம்சங்கள் தெளிவாக முன்வைக்கப்பட வேண்டும் என்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே அறிவுறுத்தியுள்ளார். 3ம் தேதி தொடங்கும் விசாரணையின் போது வாதாட வேண்டிய முக்கிய கேள்விகள் குறித்து இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளது.