​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து

Published : Feb 01, 2020 9:06 AM

ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து

Feb 01, 2020 9:06 AM

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் அருகே உள்ள குவிலாசபுர் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இத்தீவிபத்து காரணமாக அருகில் இருந்த மாணவர் விடுதியில் 25 மாணவர்கள் மயக்கம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தீ ஜூவாலைகள் கரும்புகையுடன் அப்பகுதியை சூழ்ந்ததால், தொழிற்சாலையில் பணியில் இருந்தவர்களுக்கும் அருகில் இருந்த குடியிருப்புகளில் பலருக்கும் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன.

கடுமையான பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. இந்த தீவிபத்தில் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.