​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தொடர்ந்து 3-வது மாதமாக ரூ.1 லட்சம் கோடியை தாண்டிய ஜிஎஸ்டி வரி வசூல்

Published : Feb 01, 2020 9:00 AM

தொடர்ந்து 3-வது மாதமாக ரூ.1 லட்சம் கோடியை தாண்டிய ஜிஎஸ்டி வரி வசூல்

Feb 01, 2020 9:00 AM

ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்ந்து 3-வது மாதமாக ஒரு லட்சம் கோடியை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதத்தில் ஒரு லட்சத்து மூவாயிரம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூல் ஆன நிலையில், ஜனவரி மாதத்தில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.

இதில் உள்நாட்டு ஜிஎஸ்டி வரியாக 86 ஆயிரத்து 453 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி மற்றும் செஸ் மூலமாக  23 ஆயிரத்து 597 கோடி ரூபாயும் வசூலாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய வருவாய்த்துறையால் ஜனவரி மாதத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கின் அளவிற்கு ஜிஎஸ்டி வரி வசூலாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.