​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இளைஞர்கள் சீரமைத்த குளத்தில் கழிவுகளை கொட்டி மாசு படுத்தும் சிலர்

Published : Jan 29, 2020 5:30 PM

இளைஞர்கள் சீரமைத்த குளத்தில் கழிவுகளை கொட்டி மாசு படுத்தும் சிலர்

Jan 29, 2020 5:30 PM

தேனி மாவட்டத்தில் தூர்வாரி சீரமைத்த குளத்தில் குப்பை கழிவுகளை கொட்டி மாசு படுத்துவதாக இளைஞர் மன்றத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

image

பெரியகுளம் அருகே உள்ளது தாமரைக்குளம் பேரூராட்சி. இங்குள்ள தாமரைக்குளம் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்ட நிலையில், புதர் மண்டி கிடந்ததை 6 மாதங்களுக்கு முன்பு, இளைஞர் விழுதுகள் அமைப்பை சேர்ந்த இளைஞர்கள், கல்லூரி மாணவிகள் சீரமைத்ததால் பருவமழைக்கு குளம் நிரம்பியது.

image

இந்நிலையில் இதில் மீன் வளர்க்கும் ஒப்பந்ததாரர், உணவாக கோழிகழிவுகள், மார்க்கெட் கழிவுகளை கொட்டி வருவதால் நீர் மாசுபடுவதாக விழுதுகள் அமைப்பு இளைஞர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பொதுப்பணித்துறை இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்