​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஒரே நேரத்தில் 2000-க்கும் மேற்பட்ட பெண்கள் வாள் ஏந்தி நடனமாடி அசத்தல்

Published : Jan 29, 2020 5:05 PM

ஒரே நேரத்தில் 2000-க்கும் மேற்பட்ட பெண்கள் வாள் ஏந்தி நடனமாடி அசத்தல்

Jan 29, 2020 5:05 PM

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ஒரே நேரத்தில் இரண்டாயிரத்து 126 பெண்கள், வாள் ஏந்தி நடனமாடி கின்னஸ் சாதனை படைத்தனர்.

image

ராஜபுத் போர் வீரர்களின் கலாச்சாரம், கலை மற்றும் வீரம் ஆகியவற்றைக் வெளிப்படுத்தும் வகையில், தல்வார் ராஸ் எனப்படும் வாள் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

image

இதில் கலந்துகொண்ட பெண்கள் பாரம்பரிய உடையணிந்து, வாள் ஏந்தியவாறு நடனமாடினர். மேலும், அனைவரும் ஒரே மாதிரியான நடன அசைவுகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களை அசத்தினர். இதை, ராஜ்கோட் முன்னாள் அரச குடும்பத்தினர் உட்பட ஏராளமானோர் பார்த்து ரசித்தனர்.

image