​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஐக்கிய ஜனதா தள கட்சியிலிருந்து தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் நீக்கம்

Published : Jan 29, 2020 4:49 PM

ஐக்கிய ஜனதா தள கட்சியிலிருந்து தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் நீக்கம்

Jan 29, 2020 4:49 PM

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து, கட்சியின் துணைத் தலைவரும், தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்த பிரசாந்த் கிஷோர், அண்மை காலமாக, நிதிஷ் குமாரின் முடிவுகள் குறித்து விமர்சித்து வந்தார். இதுகுறித்து, நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் மனம் திறந்த நிதிஷ்குமார், மத்திய உள்துறை அமைச்சராக உள்ள அமித் ஷா கேட்டுக்கொண்டன் பேரில், கட்சியில், பிரசாந்த் கிஷோரை சேர்த்ததாக கூறினார்.

இதற்கு பதிலளித்த பிரசாந்த் கிஷோர், தன்னை பற்றி நிதிஷ்குமார் கூறுவது பொய் என்றார். இந்நிலையில், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி, ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து, பிரசாந்த் கிஷோரும், கட்சியின் பொதுச்செயலாளர் பவன் வர்மாவும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.