​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வை தடுக்க முடியுமா..? திமுகவுக்கு சவால் விடுத்த பாமக

Published : Jan 29, 2020 3:11 PM

5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வை தடுக்க முடியுமா..? திமுகவுக்கு சவால் விடுத்த பாமக

Jan 29, 2020 3:11 PM

நடப்பு ஆண்டிற்கான 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வை மிகப்பெரிய போராட்டம் நடத்தி தடுத்திட திமுகவால் முடியுமா என்றும், அவ்வாறு முடியாவிட்டால் ’எதிர்கட்சியாக செயல்படுவதில் தோற்றுவிட்டோம்’ என திமுக ஒப்புக்கொள்ளுமா என பாமக தலைவர் ஜிகே மணி சவால் விடுத்துள்ளார்.

பொதுத்தேர்வுக்கு எதிரான போராட்டம் நடத்தப்படும் என்ற அறிவிப்பை பாமக திரும்ப பெற்றது ஒரு நாடகம் என்று திமுகவின் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்திருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக ஜிகே மணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சட்டப்பேரவையில் ஒரு உறுப்பினர்களை கூட கொண்டிராத பாமக பொதுத்தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்து, அரசின் வாக்குறுதியை பெற்றுள்ளது எனவும், பேரவையில் 100 உறுப்பினர்களை கொண்ட திமுக மாணவர்கள் நலன் சார்ந்த பொதுத்தேர்வு விவகாரத்தில் சாதித்தது என்ன என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.