​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஒரு வாரத்திற்குள் ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளை

Published : Jan 29, 2020 8:41 AM

ஒரு வாரத்திற்குள் ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளை

Jan 29, 2020 8:41 AM

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளையை விரைவில் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அமைச்சரவையின் ஒப்புதலும் பெறப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு கடந்த நவம்பர் மாத்ததில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்ததைத் தொடர்ந்து, அயோத்தி கோவில் நகரமாக பிரசித்தி பெற்று வருகிறது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி கோவிலை கட்டுவதற்காக அறக்கட்டளை ஒன்றை மத்திய அரசு ஏற்படுத்த உள்ளது. ராமர் கோவிலை கட்டுவதற்காக மத்திய அமைச்சரவையின் ஒப்புதலையும் பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.