​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழக மீனவர்கள் 11 பேர் கைது..! இலங்கை கடற்படை அட்டூழியம்

Published : Jan 27, 2020 9:06 PM

தமிழக மீனவர்கள் 11 பேர் கைது..! இலங்கை கடற்படை அட்டூழியம்

Jan 27, 2020 9:06 PM

கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 11 பேரை, எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து விசைப்படகில் கடலுக்கு சென்ற 11 மீனவர்கள் நெடுஞ்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை படகு உடன் சிறைப்பிடித்தனர்.

காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்ட மீனவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நாளை இலங்கை ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் தமிழக மீனவர்கள் 11 பேரும் ஆஜர்ப்படுத்தபட உள்ளனர்.