​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த மர்மப் பை

Published : Jan 27, 2020 5:39 PM

சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த மர்மப் பை

Jan 27, 2020 5:39 PM

சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த மர்மப் பையால் பரபரப்பு ஏற்பட்டது.

பன்னாட்டு விமான நிலைய வருகைப்பகுதியில் கிடந்த பை குறித்து துப்புரவு பணிப் பெண் அளித்த தகவலின் பேரில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் மத்திய தொழில்நுட்ப படையினர் வந்தனர்.

வெடிகுண்டு நிபுணர் கைகளில் எந்த பாதுகாப்புக் கவசமும் இன்றி பையை சோதனையிட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

பையில் துணிகள், டப்பாக்கள் உள்ளிட்ட சில பொருட்கள் மட்டுமே இருந்தன. அண்மையில் மங்களூரு விமான நிலையத்தில் இதுபோன்று கேட்பாரற்றுக் கிடந்த பையில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் சென்னை விமான நிலையத்தில் கிடந்த பை காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.