​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான உதவித் தொகையை உயர்த்த முடிவு

Published : Jan 27, 2020 5:31 PM

80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான உதவித் தொகையை உயர்த்த முடிவு

Jan 27, 2020 5:31 PM

80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இனி மாதந்தோறும் ரூ.1000 வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய அரசு சார்பில்  தேசிய சமுதாய உதவி திட்டத்தின் மூலம், 60 முதல் 79 வயது வரையிலான மூத்த குடிமக்களுக்கு மாதம் தோறும், 200 ரூபாயும், 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 500 ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 60 முதல் 79 வயது வரை உள்ளவர்களுக்கு இனி மாதம் தோறும் 500 ரூபாயும், 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 1000 ரூபாயும் வழங்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.

இதன் மூலம் சுமார் 3 கோடி மூத்த குடிமக்கள் பயன் பெறுவார்கள். இதே போன்று மாற்று திறனாளிகள், விதவைகள் மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் உதவி தொகைகள் உயர்த்தப்பட உள்ளன.