​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொரோனா வைரஸ் பாதிப்பால் பங்குச்சந்தைகளில் சரிவு

Published : Jan 27, 2020 4:47 PM

கொரோனா வைரஸ் பாதிப்பால் பங்குச்சந்தைகளில் சரிவு

Jan 27, 2020 4:47 PM

சீனாவில் பரவும் கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட சரிவின் தாக்கம் இந்திய பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தது.

அமெரிக்கா, ஜப்பான், மற்றும் ஆசியா, ஐரோப்பா நாடுகளின் பங்குச்சந்தைகள் சரிவடைந்த நிலையில், முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றதால் இந்திய பங்குச்சந்தைகளிலும் வர்த்தகம் சரிவடைந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 458 புள்ளிகள் சரிந்து 41 ஆயிரத்து 155 புள்ளிகளாக குறைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 129 புள்ளிகள் குறைந்து 12 ஆயிரத்து 119 புள்ளிகளில் நிலைகொண்டது. வங்கி, நிதி, உலோக துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் விலை சரிவடைந்தது.

எனினும் மருந்து துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தமாயின. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் சரிந்து, 71 ரூபாய் 46 காசுகளாக உள்ளது.