​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தங்கத்தின் விலை மீண்டும் 31,000 ரூபாயை கடந்தது

Published : Jan 27, 2020 11:15 AM

தங்கத்தின் விலை மீண்டும் 31,000 ரூபாயை கடந்தது

Jan 27, 2020 11:15 AM

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை 31 ஆயிரம் ரூபாயை தாண்டி உள்ளது.

சென்னையில் நேற்று 3862 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் தங்கம், இன்று 20 ரூபாய் அதிகரித்து 3882 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று 30,896 ரூபாய்க்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம், இன்று 160 ரூபாய் அதிகரித்து 31,056 ரூபாய்க்கு விற்பனையானது. 

image

இதே போன்று நேற்று 51 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் வெள்ளி இன்று 40 காசுகள் அதிகரித்து 51 ரூபாய் 40 காசுகளுக்கு விற்பனையானது. நேற்று 51,000 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ வெள்ளி இன்று 51,400 ரூபாய்க்கு விற்பனையானது.

தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ஆகியவற்றால் தங்கத்தின் விலை உயர்ந்து வருவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்