​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரூ.10க்கு மதிய உணவளிக்கும் திட்டம் -மகாராஷ்ட்ரா அரசு அறிமுகம்

Published : Jan 27, 2020 7:05 AM



ரூ.10க்கு மதிய உணவளிக்கும் திட்டம் -மகாராஷ்ட்ரா அரசு அறிமுகம்

Jan 27, 2020 7:05 AM

மகாராஷ்ட்ராவில் சிவசேனா அரசு பத்து ரூபாய்க்கு மதிய உணவளிக்கும் திட்டத்தை சோதனை முயற்சியாக தொடங்கியுள்ளது.

சிவ போஜன் என்ற பெயரில் இந்த பிற்பகல் உணவுத்திட்டம் தற்போது மாவட்ட தலைநகரங்களில் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களுக்கும் விரைவில் விரிவுபடுத்தப்பட இருப்பதாக சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு தெரிவித்துள்ளது.சிவசேனாவின் தேர்தல் அறிக்கையிலும் இத்திட்டம் இடம் பெற்றுள்ளது.

மும்பை, புனே, நாசிக் உள்ளிட்ட நகரங்களில் இத்திட்டத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். பத்து ரூபாய்க்கு சோறு, பருப்பு, 2 சப்பாத்திகள், ஒரு காய்கறி பொரியல் ஆகியவை வழங்கப்படுகின்றன.