​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: “தேவைப்பட்டால் ரஜினிகாந்த்தை விசாரணைக்கு அழைப்போம்”

Published : Jan 25, 2020 2:19 PM



தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: “தேவைப்பட்டால் ரஜினிகாந்த்தை விசாரணைக்கு அழைப்போம்”

Jan 25, 2020 2:19 PM

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக தேவைப்பட்டால் நடிகர் ரஜினிகாந்த்தை விசாரணைக்கு அழைப்போம் என ஒரு நபர் விசாரணை ஆணையத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், போராட்டக்காரர்கள் கூட்டத்தில் சமூக விரோதிகள் கலந்துவிட்டதாகக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், துப்பாக்கிச்சூடு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஒருநபர் ஆணையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகர் கூறுகையில், இந்த விவகாரத்தில் நடிகர் ரஜினியை விசாரிக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் மனு அளித்துள்ளதாகக் கூறினார்.