​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கண்ணீருடன் டென்னிசில் இருந்து ஓய்வு பெற்ற வோஸ்னாக்கி

Published : Jan 24, 2020 7:18 PM

கண்ணீருடன் டென்னிசில் இருந்து ஓய்வு பெற்ற வோஸ்னாக்கி

Jan 24, 2020 7:18 PM

டென்மார்க் நாட்டைச் சேர்ந்த வீராங்கனை வோஸ்னியாக்கி கண்ணீருடன் டென்னிசில் இருந்து ஓய்வு பெற்றார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது ஆட்டம் ஒன்றில் டென்மார்க் வீராங்கனை வோஸ்னாக்கி தோல்வி அடைந்தார். அவரை துனிசியாவின் ஒன்ஸ் ஜாபூர் வீழ்த்தினார். தோல்வி அடைந்த பிறகு தான் டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக வோஸ்னாக்கி அறிவித்தார். அப்போது அவர், உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார்.

குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட விரும்புவதால், ஓய்வு பெறுவதாக அவர் தெரிவித்தார். 29 வயதான வோஸ்னாக்கி 2018-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றிருந்தார். அவர் பெற்ற ஒரே ஒரு கிராண்ட்சிலாம் பட்டம் இதுவாகும்.